விக்கிரவாண்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திமுக பிரசாரத்தில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதால் மக்கள் சொல்வது பல்லாயிரம் கோடி திட்டங்களுக்கான கோரிக்கைகள் அல்ல. அவர் எல்லாமே அவங்களோட அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சனைகள். அதை தீர்க்கத்தான் கோரிக்கை வைக்கிறாங்க. அதை கூட பழனிச்சாமி அரசாங்கம் நிறைவேற்றல.
திமுகவுக்கு மானம் இல்லையா ? அப்படி என்று கேட்கிறார் சண்முகம். நான் கேக்குறேன் உங்கள கொலை செய்ய ஆளு அனுப்பினாரா ? அவருடைய வீட்டுல போய் தலை வாழை இலை போட்டு சாப்பிட்டீங்களா ? உனக்கு மானம் இல்லையா ? நான் கேக்குறேன். காலையில சின்னம்மா…. மாலையில் அம்மா…. மறுநாள் காலையில அம்மம்மா…. அடுத்த நாள் எந்த அம்மா ? அப்படின்னு நித்தமும் மாறி திரியும் போது வெட்கம் இருந்துச்சா உங்களுக்கு ? அம்மா, அம்மா என்று சொன்ன சண்முகத்தை பார்த்து கேட்கிறேன்…
அந்த அம்மாவோட மரணத்தில் இருக்கக்கூடிய மர்மத்தையும் விளக்க கண்டுபிடிக்கக்கூடிய முயற்சியில் நீங்கள் ஈடுபட்டீங்களா ? சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி பேட்டி கொடுத்தாரே… துணை முதல் அமைச்சராக இப்போ இருக்குற இருக்குற பன்னீர்செல்வத்தை கருங்காளி, துரோகின்னு சொன்னதும் சிவி. சண்முகம் தானே. இன்றைக்கு இரண்டு பேரும் ஒரே அமைச்சரவையில் எப்படி இருக்கீங்க ? 2012ஆண்டு சண்முகத்தின் கிட்ட இருந்த அமைச்சர் பதவியையும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியையும் ஜெயலலிதா பறிச்சாங்க என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.