Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு… வெளியிட போகிறார் முதல்வர்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்று நடைபெற உள்ளது. அதிமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சி மே மாதம் நிறைவடைகிறது. அதனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தான் வருகின்ற சட்டசபை கூட்டத் தில் தாக்கல் செய்ய முடியும். மிக விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆறுமாத கால இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்களை இடம்பெற செய்யலாம் என்பது பற்றி ஆலோசிக்க இன்று அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு மிக முக்கியமான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |