Categories
அரசியல் மாநில செய்திகள்

பாமகவை போல கேட்க…. நிறைய டிமாண்ட் இருக்கு…. நெருக்கும் தேமுதிக … திணற போகும் அதிமுக …!!

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் கூட்டணி தொடர்பான பணியைத் தொடங்குவதும் தொடங்குங்கள் என்று தான் சொல்கின்றேன். பாமக 20% சதவீத இட ஒதுக்கீடு டிமாண்ட் அதிமுகவிடம் வைத்தது போல எனக்ளுக்கும் நிறைய டிமாண்ட் இருக்கிறது. என்ன விஷயத்திற்காக நாங்கள் கூட்டணி போகின்றோம் என பொறுத்திருந்து பாருங்கள்.

தேமுதிக மக்களை சந்திக்கும் என்பதை கொள்கை ரீதியாக முடிவெடுத்து விட்டு தேர்தலுக்கு வருவோம், பிரச்சாரத்திற்கு வருவோம். தமிழ்நாடு முழுவதும் எங்கள் கட்சியின் வளர்ச்சி  234 தொகுதிகளிலும் போட்டி போடுவதற்கு தயாராக உள்ளது. அனைத்து பூத் கமிட்டிகளும் அமைத்து நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

தமிழகத்தில் உள்ள பிரச்சனைக்கு தேமுதிக வரவில்லை என்று நீங்க ஒரு கேள்வி கேட்கணும் என்பதற்காக கேட்காதீர்கள். நல்லா கவனிங்க, உற்று நோக்குங்கள், எல்லா போராட்டத்திலும் தேமுதிக கலந்து கொண்டுள்ளது. எல்லாவற்றிக்கும் அறிக்கை கொடுத்து கொண்டு தான் இருக்கின்றது.

கொரோனா காலம் என்பதால் ஒரு வருட காலம் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளக்கூடாது, மிகப்பெரிய ஒரு கூட்டத்தை சேர்க்கக் கூடாது என்பதை அரசாங்கம் சொல்லும் போது அதை மதிக்கணும், நிச்சயமாக மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் தேமுதிக முதலில் களம் காணும், களம் கண்டு கொண்டு தான் இருக்கின்றது.

விவசாயிகள் பிரச்சினைகள்,  மருத்துவர்கள் பிரச்சனை, மாணவர்கள் பிரச்சினை என எதுவாக இருந்தாலும் நாங்கள் நேரடியாக சென்று களத்தில் இறங்கி போராடி இருக்கின்றோம் என பிரேமலதா தெரிவித்தார்.

Categories

Tech |