Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாலிபரின் மூர்க்கத்தனமாக செயல்… மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை… நிவாரணம் வழங்க வேண்டி போராட்டம்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வாலிபர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செம்பொன் குடியிருப்பு பகுதியில் சின்ன துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது இளம்பெண்ணை கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த இளம் பெண்ணை காணவில்லை என தேடிய உறவினர்கள் அவரை மயங்கிய நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெல்லை அரசு மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சின்ன துறையை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு இழப்பீடு வழங்கக்கோரி தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பேர்சில், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து மற்றும் பொதுமக்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து குற்றவாளி மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |