Categories
உலக செய்திகள்

உறைபனியில் மூழ்கிய பிரிட்டன்…! நடுங்கி திணறும் மக்கள்… முக்கிய செய்தி சொன்ன வானிலை மையம் ..!!

பிரிட்டனில் வரலாறு காணாத குளிரால் அந்நாடு முழுவதும் பனிப்பிரதேசமாக மாறி வெப்பநிலை மைனஸ் 23 டிகிரிக்கும் குறைவாக பதிவாகியுள்ளது .

பிரிட்டனின் தலைநகரமான லண்டன், பெரமர் , அபெர்டீன்ஷைர் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத உறைபனி நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர் பிரதேசமாக மாறி உள்ளது. அங்கு வெப்ப நிலை மைனஸ் 23 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கொரோன தொற்று பரவலுக்கிடையே இவ்வாறு கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்களை கவனமுடன் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனை அடுத்துள்ள கென்ட் மற்றும் டோவர் பகுதிகளில் குளிர் மைனஸ் 20 டிகிரி நிலவுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பணியால் உறைந்த நிலையில் மாட்டிக்கொண்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு வானிலை மையம் இந்த குளிர் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என அறிவித்துள்ளது. இதே மாதிரி 1995ஆம் ஆண்டு மைனஸ்23 டிகிரி குளிர் நிலவியது என வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |