Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனு கொடுத்தும் பயனில்லை… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… மூடப்பட்ட புதிய டாஸ்மாக் கடை…!!

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு மும்முரமாக பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கு கிராண்டிபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் இது தொடர்பாக மனு ஒன்றை அளித்துள்ளனர். ஆனால் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு காலை 11 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளிமேடு பேட்டை போலீசார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து புதிய டாஸ்மாக் கடையின் கண்காணிப்பாளர் ராமதாஸ் என்பவர் மதியம் ஒரு மணிக்கு டாஸ்மாக் கடையை மூடிவிட்டு அதிலிருந்த மதுபாட்டில்களை மினி லாரியில் ஏற்றி விட்டார். அதன்பின் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |