அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அந்த ஆசிரியை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவருடன் இருந்த மற்ற ஆசிரியர்களுக்கும் வகுப்பில் இருந்த மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள். இதனையடுத்து அந்தப் பள்ளியில் கொரோனா தொற்று பரவாத வகையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.