பேரீச்சம்பழ கேக் செய்ய தேவையான பொருட்கள்
செய்முறை :
முதலில் பேரீச்சம்பழத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதிலுள்ள விதை நிக்கி கொள்ளவும். பின்பு மற்றோரு பாத்திரத்தில் பாலை ஊற்றியபின் விதையை நீக்கிய பேரீச்சம்பழத்தில் முக்கால் வாசியை மட்டும் போட்டு, 20 நிமிடம் நன்கு ஊற வைத்து கொள்ளவும்.
அதன் பின்பு மிக்சிஜாரில் நன்கு ஊறிய பேரீச்சம் பழத்தை போட்டு, அதனுடன் சர்க்கரையை சேர்த்து மையாக அரைத்து எடுத்து கொள்ளவும். மேலும் அரைத்த பேரீச்சம்பழத்துடன், எண்ணெய் ஊற்றி நன்கு கரண்டியால் கலந்து கொள்ளவும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, சமையல் சோடாவை போட்டு நன்கு ஒன்று சேரும் அளவுக்கு கலந்து கொள்ளவும். மேலும் கலந்த மைதா மாவுடன், அரைத்த பேரீச்சம்பழ கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கட்டி வராத அளவுக்கு நன்கு கலக்கியபின், அதனுடன் அக்ரூட், முந்திரி பருப்பை போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் மைக்ரோவேவ் ஓவனில் உள்ள பேக்கிங் பானியை எடுத்து, அதன் உள்பகுதியில் சுற்றிலும் வெண்ணெய் தடவியபின், கலந்து வைத்த பேரீச்சம்பழக் கலவையை ஊற்றி சுற்றிலும் பரப்பி கொள்ளவும். பின்பு பரப்பிய கலவையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து, 350 F ல் சூடு படுத்தி கொள்ளவும்.
அடுத்து சூடுபடுத்திய மைக்ரோவேவ் ஓவனை அப்படியே 35 நிமிடங்களுக்கு பேக் செய்து வேக வைத்து எடுத்து, அதன் மேல் மீதியுள்ள பேரிச்சம் பழத்தை அலங்கரித்து பரிமாறினால், அருமையான ருசியில் பேரீச்சம்பழ கேக் ரெடி.