Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் உதவிக்கு…. டக்குனு 1100 நம்பருக்கு கால் பண்ணுங்க…. அசத்தும் எடப்பாடி அரசு…!!

தமிழக அரசின் அனைத்து உதவிகளையும் பெற 1100 நம்பருக்கு அழைக்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி 1100 என்ற எண்ணுக்கு அழைத்து தமிழக அரசின் அனைத்து உதவியையும் பெற திட்டத்தை இன்று தொடக்கி வைக்கிறார்.

இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம். மேலும் இதன்மூலம் அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும். “1100” என்ற நம்பர் மூலம் அளிக்கப்படும் குறைகளுக்கு உடனடியாக துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |