ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் வேடிக்கை காட்டும் குரங்கு அல்ல என்று தெரிவித்துள்ளார்.
உலகில் முதல் அதிக செயல்திறன் மிக்க கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே, அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பல நாடுகளில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளனர். சில நாடுகளில் மட்டுமே ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் 68 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கொரோனா தடுப்பூசி தற்போது எடுத்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, இந்த ஆண்டு இறுதிக்குள் நான் தடுப்பூசியை எடுத்துக் கொள்வேன். ஆனால் அதனை பொதுமக்களுக்கு கேமரா முன்பு விளம்பரப்படுத்த நான் விரும்பவில்லை. அப்படி காட்டுவதற்கு நான் வேடிக்கை காட்டும் குரங்கு அல்ல.
வழமையான தடுப்பூசிகள் சில எடுத்துக் கொள்ள நான் திட்டமிட்டுள்ளேன். ஆகையால் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னர் இந்த ஆண்டு இறுதிக்குள் நான் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வேன் என்று தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி புதினை நேரடியாக சந்திக்க வேண்டுமென்றால் இரண்டு வாரகாலம் தனிமைப்படுத்திய பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.