தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் க டுமையாக விமர்ச்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் திமுகவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். அப்போது அவர் பேசுகையில், “நான் இதுவரை 62 தொகுதிகளில் பிரசாரம் செய்தேன். ஆனால் சத்தியமாக இந்த மாதிரி ஒரு எழுச்சியான கூட்டத்தை காண முடியவில்லை.
உங்கள் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளவர். கடந்த முறை 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தொடர்ந்து 25 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி வெற்றி பெற செய்ய நீங்கள் தயாராக இருங்கள்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “ஒவ்வொரு அமைச்சருக்கும் பட்டப்பெயர் வைத்து பேசினார். அப்போது முதலமைச்சரை எடுபிடி எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் டயர் நக்கி. இதை நான் சொல்லவில்லை பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கூறினார் என கிண்டலாக தெரிவித்தார். மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு அம்மாவாசைகளே உள்ளதால் நமது நாட்டில் உள்ள இரண்டு அமாவாசைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சாடினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி, கழக ஆட்சி வந்தவுடன் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு பரப்பலாறு அணை தூர்வாரப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியங்களுக்கு அரசு கலைக்கல்லூரி அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒட்டன்சத்திரம் வட்ட அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி தலைமை அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை அமைய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒட்டன்சத்திரத்தில் அதிகமாக பயிரிடப்பட்டு வரும் கண்வலிக்கிழங்கு விதையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரத்தில் பிரசித்திபெற்ற காய்கறி சந்தையில் 100 மெட்ரிக் டன் வசதி உள்ள குளிர்சாதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேலைவாய்ப்பு தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று கூறினார்.