Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: அரசு ஊழியர்களுக்கு செம மாஸ் அறிவிப்பு… மத்திய அரசு அதிரடி…!!!

இயற்கை எய்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி இயற்கை எய்திய மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் மேல் உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரம் ரூபாயில் இருந்து 1,25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் மனைவி மற்றும் கணவர் இருவரும் அரசு ஊழியர்களாக இருந்து, அவர்கள் இறந்தால் அவர்களது குழந்தைக்கு தாய் தந்தை என இருவரது மரணத்திற்காக இரண்டு குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி உண்டு என அறிவித்துள்ளது.

Categories

Tech |