லண்டனில் 60 ஆண்டுகளில் இல்லாமல் முதன்முறையாக நதியின் பெரும்பாலான பகுதிகள் உறைந்து காணப்படுகிறது.
லண்டனில் வெப்பநிலை -2C ஆக குறைந்துள்ளது. இதனால் கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக தேம்ஸ் நதியின் பெரும்பாலான பகுதிகள் உறைந்துள்ளது. தேம்ஸ் நதி கடைசியாக கடந்த 1963ஆம் ஆண்டு ஜனவரியில் முழுவதுமாக உறைந்தது.
தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக கடலின் சில பகுதிகளும் உறைந்து காணப்படுகிறது. இங்கிலாந்தில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த புதன்கிழமை இரவு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை -20C கீழே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.