பிரான்சில் கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் அளிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல மில்லியன் எண்ணிக்கையிலான டோஸ்களை மிச்சப்படுத்த முடியும். மேலும் உரிய நேரத்தில் போதுமான தடுப்பூசிகள் கிடைக்காமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருவதால் பிரான்சின் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பாதிப்புக்குள்ளாகி குணம் அடைந்தவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்க்கும் சக்தி உருவாகி இருக்கும். அதனால் அவர்களுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே போதுமானது என்று பிரான்ஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் தடுப்பூசி கிடைப்பதில் ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.