தலையில் ஏற்படும் பொடுகை தீர்ப்பது முதல் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் வரை பல பிரச்சினைகளுக்கு வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. அளவுக்கு அதிகப்படியான கசப்பு தன்மை கொண்டதால் நம்மில் பலரும் அதை தவிர்த்து வருகிறோம். ஆனால் வெறுமனே சரும பிரச்சனை, தலைமுடி பிரச்சினை மட்டுமல்லாமல் பல நோய்களுக்கும் உதவிகளை செய்ய தயாராக இருக்கிறது. நிறைய இலைகளை சாப்பிட வேண்டும் என்று கிடையாது வெறும் 4 இலைகளை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும் நிறைய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இதில் ஆன்டி-பாக்டீரியல் எதிர்ப்பு பண்புகள் உள்ளது.
நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த ஒரே வழி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மட்டும் தான். இதற்கு வேப்பிலை மிக சிறந்த தீர்வாக இருக்கும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 10-15 இலைகளை போட்டு நன்கு கொதிக்க வைத்து, அது கால் லிட்டராக வரும் வரை கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதை செய்தால் நீரிழிவு பிரச்சினை இருக்காது.
டயரியா:
டயரியா பிரச்சினை இருப்பவர்களுக்கு வேப்பிலை சிறந்த தீர்வாக இருக்கும். இதற்கு கொஞ்சம் வேப்பிலைகளை எடுத்து நன்கு அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் டயரியா பிரச்சினை கட்டுக்குள் வரும்.
குடல் புழுக்கள்:
பெரும்பாலும் இந்த குடற்புழுக்கள் பிரச்சினை சிறியவர்களுக்கு தான் ஏற்படும். இந்த குடற் புழுக்களை வெளியேற்ற வேப்பிலை சிறந்த மருந்தாக எப்படி எடுத்துக் கொள்ளலாம் என பார்க்கலாம்.
கொழுந்து வேப்ப இலைகள் அவ்வளவாக கசக்காது. கொஞ்சம் இனிய சுவையுடன் இருக்கும். இதை குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கலாம். அல்லது 2-5 வேப்பிலைகளை மட்டும் கிள்ளி போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் அதில் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுக்கலாம். குடற்புழுக்கள் வெளிய வந்து விடும்.