இலங்கையில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சீனாவின் வுஹான் நாட்டில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிர்களை பறித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல் பிரிட்டனிலும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய வைரஸ் சீனாவில் பரவிய கொரானா வைரஸ் விட 70% வேகமாக பரவும் திறன் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால் இதை தங்கள் நாட்டுக்குள் அண்ட விடக்கூடாது என்பதற்காக பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரிட்டன் உடனான விமான சேவைக்கு தடை விதித்தனர். இந்நிலையில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொழும்பு ஜெயவர்தனேபுரா பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ இயக்குனர் மருத்துவர் சண்டிமா ஜீவந்திரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒரு நாளைக்கு 800 க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக உரு மாறியுள்ள கொரோனவைரஸ் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த மாத இறுதியில் இருந்து இந்தியா அளித்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.