கனடாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது என தெரியவந்துள்ளது.
கனடாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் எம்பிகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அங்கஸ் ரீட் நிறுவனம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 41%பேர் கனடாவின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 59 சதவீதம் பேர் கனடா அரசு திட்டமிடுதல் தோல்வி அடைந்துள்ளது என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதற்க்கு முன்னதாக தடுப்பூசி போட விரும்பப்படும் மக்களுக்கு அதற்கான வாய்ப்பை அளிப்போம் என்று கனடா பிரதமர் உறுதி அளித்திருந்தார்.அவரின் இந்த சொல்லுக்கு 37% பேர் மட்டுமே நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.