மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கக்ப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இந்நிலையில் மோடியின் வருகையையொட்டி நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை( 5 மணி நேரம்) சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
கோயம்பேட்டிலிருந்து சென்ட்ரல் வரும் மாநகர பேருந்துகள் பொதுமக்களின் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக அண்ணாசாலை செல்லலாம். ராயபுரத்தில் இருந்து பாரிமுனை செல்லும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு வழியாக செல்லலாம். அண்ணாசாலையில் இருந்து ராயபுரம் செல்ல ஸ்பென்சர் பென்னி சாலை, நாயர் பாலம் வழியாக செல்லலாம் என்று அறிவித்துள்ளது.