கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 4 பேர் மருத்துவமனையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் பெரும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல் கட்டமாக மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நான்கு பேர் உடனடியாக மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மயங்கி விழுந்த அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.