நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ 286.91 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த வருடம் கடைசியில் நிவர் மற்றும் புரவி புயல் என்று மாறி மாறி தாக்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த புயல்களால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைத்தது. மேலும் நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ 286.91 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு ரூபாய் 9.9 1 கோடி நிதியையும், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கும் மொத்தம் ரூபாய் 3,113.05 கோடி நிதியையும் ஒதுக்கி உள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்திற்கு ரூபாய்1,255.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.