திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த மக்கள் கலைந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அரசின் சாதனைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வரின் பேச்சைக் கேட்காமல் திரும்பிச் சென்று கொண்டிருந்த சம்பவம் அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் பலம்பொருந்திய அதிமுக கூட்டத்திலேயே முதல்வர் பேச்சை கேட்காமல் பொதுமக்கள் கலைந்து சென்று கொண்டிருந்த சம்பவம் அதிமுகவினரிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.