Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யய்யோ… என்னது மீண்டும் மக்கள் நலக்கூட்டணியா?… பதறிப்போன வைகோ…!!!

தமிழகத்தில் மீண்டும் மக்கள் நல கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வர தற்போது அவசியமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் நல கூட்டணி போன்று மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு இருக்கா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதறிப்போன வைகோ அய்யய்யோ மீண்டும் அதுபோன்ற கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என தெரிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி உருவாக்குவதில் தீவிர முனைப்பு காட்டிய வைகோ, இன்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |