Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா?… அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ…!!!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா கிருஷ்ணன்  படிக்காதவன் , பேர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட  சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் . இதையடுத்தது இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான ‘முதல் வசந்தம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இதை தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் பல திரைப் படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வந்தார் . கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் .

மேலும் பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் சிவகாமி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு உலகப்புகழ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ரித்திக் கிருஷ்ணா என்ற ஒரு மகன் உள்ளார் . இந்நிலையில் நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனின் 16 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதாக கூறி கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் .

Categories

Tech |