‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும்அடுத்த படத்தில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டெடி’. அனிமேஷன் கலந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது .
இந்நிலையில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த படத்தை கே9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது . ஏற்கனவே இந்த நிறுவனம் ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது . ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.