Categories
டெக்னாலஜி பல்சுவை

“இன்சூரன்ஸ் பாலிசி, பான் கார்டு தொலைந்தால்”… யாரை அணுகுவது…? என்ன செய்ய வேண்டும்..?

இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் பான் கார்டு தொலைந்துவிட்டால் யாரை அணுகுவது எப்படி பெறுவது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் , அதன் நகலை எப்படி பெறுவது என்பது குறித்த முதலில்பார்ப்போம்.

முதலில் பாலிசியை விநியோகம் செய்த கிளையை அணுக வேண்டும். முகவரி சான்று, புகைப்பட அடையாள சான்றின் நகல்களில், நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல் இணைக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில், 1,000 ரூபாய்க்கு 20 பைசா வீதம், கவரேஜ் தொகைக்கு ஏற்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள், நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நகல் பாலிசி கோரும் விண்ணப்ப கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை, 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள், கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும். அதைப் பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்துத் தர வேண்டும்.

பான் கார்டு

பான் கார்டு தொலைந்தால், பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறையினரை அணுகலாம். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாள சான்று மற்றும் முகவரி சான்று நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.96 ரூபாய். விண்ணப்பித்த, 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும். பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி, அதில் தேவையான விவரங்களைக் குறிப்பிட்டு, விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |