Categories
மாநில செய்திகள்

ரூ.50,000, 40,000, 10,000, 500, 1000… இது என்னது தெரியுமா?… மக்களே சிந்தியுங்கள்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் ராமநாதபுரம் இளைஞர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் தேர்தல் பற்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் ராமநாதபுரம் இளைஞர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், “ஓட்டுக்கு பணம் கொடுத்து வாங்குவோர், விற்போர் கவனத்திற்கு இன்றைய சந்தை மதிப்பு, எருமை மாடு ரூ,50,000, பசுமாடு ரூ.40,000, ஆடு ரூ.10,000, நாய் ரூ.7,000, பன்றி ஐந்தாயிரம் ஆனால் மக்களின் ஓட்டு ரூபாய் 500 முதல் 1000 வரை தான். உங்களின் ஓட்டு ஒரு பன்றியின் விலையை விட குறைவு. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |