நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், அயலான் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது . இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது .
இந்தப் படத்தில் டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன், நடிகர் எஸ்.ஜே.சூர்யா ,குக் வித் கோமாளி சிவாங்கி உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இந்நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஷாரிக் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டான்’ பட படப்பிடிப்புக்காக விமானத்தில் செல்லும்போது சிவாங்கி மற்றும் ஷாரிக் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது . மேலும் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமாவின் மகன் தான் ஷாரிக் என்பது குறிப்பிடத்தக்கது .