Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே எச்சரிக்கை… சிறுவன் உயிரை குடித்த “ஃப்ரீ பயர்”… கொஞ்சம் கவனமா இருங்க..!!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஃப்ரீ பையர் கேம் விளையாடி எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பப்ஜி விளையாட்டில் மூழ்கிக் கிடந்தனர். அதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதால், அதற்கு அடிமையாக இருந்தவர்கள் “ஃப்ரீ பயர்” விளையாட்டுக்கு அடிமையாக மாறி உள்ளனர். இந்நிலையில் திருவள்ளூர் அருகே பாபு என்ற தனியார் ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு ராகேஷ் என்ற மகன் இருக்கிறான். அவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அச்சிறுவன் ஃப்ரீ பயர் விளையாட்டிற்கு அடிமையாகி தன்னுடைய தாய் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ராகேஷ், எப்போதும் செல்போனில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர்கள் வாங்கிக்கொடுத்த செல்போனில், ஃப்ரீ பயர் விளையாட்டுக்கு அடிமையான ராகேஷ், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதனால் வீட்டின் மாடியில் உள்ள அறையில் கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்டான். தங்களின் ஒரே மகன் தற்கொலை செய்து கொண்டதால் பெற்றோர்கள் கதறி அழுதனர்.

Categories

Tech |