Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

” கணவனுடன் சண்டை”… 2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய்… கள்ளக்குறிச்சியில் அரங்கேறிய சம்பவம்..!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சம்சுநிஷா என்ற பெண் கணவருடன் சண்டை போட்டு பிரிந்து தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழம்பட்டை  சேர்ந்தவர் சம்சுநிஷா. இவருக்கு காஜாமைதீன் என்பவருடன் திருமணம் ஆகி 14 வயதில் ஒரு மகள், 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார், சில ஆண்டுகளுக்கு முன்பு காஜாமைதீன்  காலமானார். அதன்பிறகு சம்சுநிஷா கள்ளக்குறிச்சியை  சேர்ந்த ஷெரீப்பை திருமணம் செய்தார். அவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று மதியம் 3 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்போனில் ஷரீப்பை தொடர்பு கொண்டு தற்கொலை செய்து போவதாக கூறியுள்ளார்.  இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷரீப்பை தனது பெற்றோரிடம் தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷரீப்பின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது சம்சுநிஷா இரண்டு குழந்தைகளை தூக்கிலிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார், சம்சுநிஷா மற்றும் குழந்தைகளை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக தெரிவித்தன. இதையடுத்து சம்சுநிஷாக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்பு விழுப்புரம் மாவட்டத்தில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் ஷரீப்பை வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |