சுவிட்சர்லாந்தில் பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்
அயர்லாந்தில் வரும் பிப்ரவரி 28 கொரோனா பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்ற கேள்விக்கு சுகாதார துறை அமைச்சர் அலைன் பெர்செட் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களில் தெரிவித்ததாவது, ஊரடங்கு விதிகளில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என பெடரல் கவுன்சில் திட்டமிடவுள்ளது.
மாகாணங்கள் உடன் ஆலோசனை செய்த பிறகே இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியிடப்படும். ஆனால் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படாது. பெடரல் கவுன்சில் அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்த விரும்புகிறது. ஆனால் அது பொதுமக்களின் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால், பொதுமக்கள் விதிகளைக் கடைப்பிடிப்பதை தவற விடக்கூடாது.
14 நாட்களில் ஒரு லட்சம் பேரில் 10 பேருக்கு மட்டும் புதிதாகக் தொற்று கண்டறியப்படும் இடங்களில் மட்டுமேபொது முடக்கம் தளர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் 14 நாட்களில் ஒரு லட்சம் பேரில் இருந்து 250 பேர் வரை தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.