Categories
தேசிய செய்திகள்

“ஓவியாவுக்கு தில்ல பார்த்தியா” #GoBackModi டுவிட் பதிவு…. நெட்டிசன்கள் ஆச்சர்யம்…!!

நடிகை ஓவியா #GoBackModi என்று டுவிட்டரில் பதிவிட்டதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு மார்க்கெட் குறைந்த நேரத்தில் தான் பிக் பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் தைரியமாக பேசும் விதத்தை பார்த்து அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்தனர். அவருக்காக ஓவியா ஆர்மி, ஓவியா நேவி என அவருடைய ரசிகர்கள் ஆரம்பித்தனர். பிக் பாஸில் இருந்து வந்தபிறகு ஓவியா சினிமாவில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்த்த போதும் அவர் படங்களில் அதிகம் நடிக்கவில்லை. ஆனால் ட்விட்டரில் மட்டும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ஓவியா #GoBackModi என தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வந்த நிலையில் #GoBackModi என்ற ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதை பார்த்த நெட்டிசன்கள் “ஓவியாவுக்கு தைரியத்தை பாத்தியா” என வியப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |