தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தேதி நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . இது நடிகர் தனுஷின் 41 வது படமாகும் . இந்தப் படத்தை பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார் . மேலும் லால் கௌரி ,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . சமீபத்தில் நடிகர் தனுஷ் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக டுவிட்டரில் தெரிவித்தார் .
We are bringing you the first look poster and theatrical release date announcement of #Karnan at 11:06 am tomorrow. Gear up! @dhanushkraja @Music_Santhosh @mari_selvaraj @KarnanTheMovie #KarnanArrivesOnApril pic.twitter.com/bM9WjyIuSi
— Kalaippuli S Thanu (@theVcreations) February 13, 2021
இந்நிலையில் ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் . அதில் ‘நாளை காலை 11: 06 மணிக்கு ‘கர்ணன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸாகும் தேதி வெளியிடப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது . இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.