சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அமைச்சர் தங்கமணி மரியாதை செலுத்தினார்.
கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதன் காரணமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமல் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜூலை 28ம் தேதி மீண்டும் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்பின் நடைபெற்ற அனைத்து சட்டசபை கூட்டத் தொடரிலும் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு மற்றும் மின்சாரம் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற இருக்கும்நிலையில், அமைச்சர் தங்கமணி விவாதத்தில் பங்கேற்பதற்கு முன்பாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.இன்று இவர் துறை சார்ந்த மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.