பெண் ஒருவர் தனது 5 மில்லியன் சொத்துக்களை தனது நாயின் பெயரில் உயில் எழுதி வைத்துள்ள சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பில் டோரிஸ்(84). திருமணமாகாத இவர் தொழிலில் வெற்றிகரமாக திகழ்ந்ததால் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார். ஆனால் யாரையும் தத்து எடுத்து வளர்க்கவில்லை. ஆனால் அவருக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரு நாய் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து பில் டோரிஸ் எங்கு சென்றாலும் அந்த நாயுடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த நாயை ஒரு நிமிடம் கூட அவர் பிரிந்து இருக்க மாட்டாராம்.
அந்த அளவுக்கு அவர் அந்த நாயை நேசித்து வந்துள்ளார். இதையடுத்து தனக்கு 84 வயதாகி முதுமை ஆகிவிட்டதால் தன் இறுதிக் காலத்தை நெருங்கியதை உணர்ந்து தனது நாயை தவிக்க விட்டுவிடக் கூடாது என்பதற்காக ஐந்து மில்லியன் சொத்து அனைத்தையும் தனது நாய்க்கு உயில் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து அறக்கட்டளை ஒன்று அந்த நாயின் அனைத்து தேவைகளையும் இந்த சொத்தின் மூலமாக செய்து வருகிறது.