தமிழகத்திற்கு மட்டும் புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 7 பட்டியலின உட் பிரிவைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கும் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தேவேந்திர குலத்தான், கடையன், குடும்பன், பள்ளன், காலாடி, பண்ணடி, வாதிரியார் ஆகிய ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, அரசமைப்பு சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் அரசமைப்பு சாசன சட்டத்தில் செய்யப்படும் திருத்தம் தமிழகத்திற்கு மட்டும் பொருந்தும் என்று அறிவித்துள்ளது.