Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுக்கு கிடைத்த கிப்ட்… வைரலாகும் செம கியூட் வீடியோ…!!!

நடிகர் சிம்புவுக்கு அவரது தங்கை மகன் பிறந்தநாள் பரிசளிக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு  நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது இவர் நடிப்பில் மாநாடு ,பத்து தல ஆகிய படங்கள் தயாராகி வருகிறது . இதுதவிர நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம்,  நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என செம பிஸியாக இருக்கிறார் .

இன்ஸ்டாவில் கியூட் வீடியோ பதிவிட்ட சிம்பு..குவியும் லைக்ஸ்கள்!

கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய சிம்புவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர் . இந்நிலையில் நடிகர் சிம்பு அவரது தங்கை மகன் அவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த க்யூட்டான வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார் . அதில் தங்கை மகன் கொடுத்த பரிசை வாங்கிய சிம்பு பின்  அவனை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கிறார் . தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Categories

Tech |