Categories
தேசிய செய்திகள்

” வீட்டுக்கு முன்னாடி காரை நிறுத்தினா”… ரூ.5000 பைன்… எங்க தெரியுமா..?

வீட்டிற்கு முன்பு காரை நிறுத்தினால் வருடத்திற்கு 5000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு நகரத்தில் கார் பார்க்கிங் செய்வது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பலரும் வீட்டுக்கு உள்ளேயும் வெளியே தெருவில் ஒரு காரும் பார்க் செய்துவருகின்றனர். பார்க்கிங்  இல்லாத வீடுகளிலும் கூட கார் இருக்கும் என்பதால், தெருக்களில் பிளாட்பாரங்களில் கார் பார்க்கிங் செய்வது அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த தற்போது கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி வீடுகளுக்கு முன்பு கார் நிறுத்தினால் வருடத்திற்கு 5000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி செலுத்தினால் மட்டுமே இனிமே காரை வீட்டிற்கு முன்பு தெருவில் பார்க் செய்ய முடியாமல் பார்த்துக்கொள்ள முடியும். புதிதாக வாங்கும் போது அதை நிறுத்துவதற்கு இடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகு வாகனங்கள் பதிவு செய்ய வேண்டுமென்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் வாகன பார்க்கிங் இல்லாத நிலையில் ஒவ்வொருவரும் 2 கார்களை வாங்கி வைக்கின்றன. அதுவும் போதாது என்று மேலும் ஒரு கார் புதிதாக வந்தால் அதையும் வாங்குவதற்கு முயற்சி செய்கின்றன. இதன் காரணத்தினால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை தடுக்க மாநில அரசின் இந்த புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.

Categories

Tech |