நடிகை ஷாலினி மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது .
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலினி ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதன் பின் பல திரைப்படங்களில் நடித்த இவர் மணிரத்தினம் இயக்கத்தில் மாதவனுடன் இணைந்து நடித்த ‘அலைபாயுதே’ படம் தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது . இதையடுத்து நடிகர் அஜித்தை திருமணம் செய்துகொண்ட ஷாலினி 2001-க்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகினார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘பிரியாத வரம் வேண்டும்’ .
இந்நிலையில் நடிகை ஷாலினி இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது . மேலும் படப்பிடிப்புக்காக விரைவில் நடிகை சாலினி ஹைதராபாத் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது . மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி ,விக்ரம் ,ரஹ்மான் ,சரத்குமார் ,ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது . தற்போது இந்தப் படத்தில் நடிகை ஷாலினியும் இணையவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .