அதிகமான உறைப்பனி காரணமாக ஊட்டியில் தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உறைபனி தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதால் அங்கு உள்ள புல்வெளிகள், செடிகள் மற்றும் வனப்பகுதிகள் வேகமாக கருகி கொண்டே வருகின்றன. இந்நிலையில் கடுமையான உறைப்பனி காரணமாக கேத்தி, பாலாடா, சோலூர், லவ்டெல், வேலிவியூ போன்ற இடங்களில் பச்சைப் பசேலென காட்சி அளித்த தேயிலைத் தோட்டங்கள் பனியின் காரணமாக கருக ஆரம்பித்து விட்டன. இதனை அடுத்து உளுந்து மற்றும் நல்ல இலைகளை தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் வினியோகம் செய்கின்றனர்.
ஆனால் தற்போது இலைகள் கருகி வருவதால் அந்த இலைகளின் விலையானது குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனை தடுப்பதற்காக பகல் மற்றும் இரவு நேரங்களில் செடிகளை பாதுகாக்கும் பொருட்டு தேயிலைச் செடிகளின் மீது மற்ற செடிகளை போட்டு விவசாயிகள் மூடி வைக்கின்றனர். இதனால் செடிகள் மீது பனி விழாமல் அவை பாதுகாக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்குள்ள பூண்டு, பீட்ரூட், கேரட் போன்ற காய்கறி பயிர்களிலும் உறை பனி படர்ந்த காணப்படுகிறது. மேலும் கடுமையான உறைபனியின் காரணமாக பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிக ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.