Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்… கைது செய்யப்பட்ட கட்டிட மேஸ்திரி…!!

சாலையைக் கடக்க முயன்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி புதூரில் வெங்கடேசன் என்ற கட்டிடம் மேஸ்திரி வசித்து வருகிறார். இவர் தாலுகா அலுவலகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் படுகாயமடைந்தார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் பொட்டணம் கிராமத்தில் வசித்து வந்த முருகையா என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்திய கட்டிட மேஸ்திரியான வெங்கடேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |