இரவில் நமக்கு குறட்டை வராமல் இருப்பதற்கு இதனை இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் குரட்டை வராது.
உடல் பருமனாக இருப்பவர்கள் , தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்களுக்கு குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை என்பது அவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தாது. அவரை சுற்றி உள்ளவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் . இப்பொழுது குறட்டை சத்தத்தை குறைத்து குறட்டையில் இருந்து விடுபட இந்த இயற்கை முறையையே பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
1. தும்பை பூ
2. நல்லெண்ணெய் 100 மில்லி
செய்முறை:
முதலில் தும்பை பூவை 2 ஸ்பூன் அளவு எடுத்து வானலியில் 100 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் தும்பை பூவை போடவும். ஈரப்பதம் போகும் வரை நன்கு தைல பதத்திற்கு காய்ச்சவும். பின் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இதை இரவில் தினமும் மூக்கில் 2 சொட்டு இட்டு வந்தால் மூன்று மாதத்தில் குறட்டைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.