Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உன்னை நம்பியதற்கு தந்த பரிசா… கண்டுபிடிக்க மாட்டாங்கன்னு நினைச்சேன்… வசமாக சிக்கிய பெண்…!!

வேலை செய்த வீட்டிலேயே பெண் தங்க நகைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு புறப்பட்டுள்ளார். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ஒரு வைர கம்மல் மாயமாகி இருப்பதை கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் மாங்காடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தபோது வீட்டின் கதவு உடைக்கப்படாததால் அந்த நகையை வீட்டில் இருப்பவர்கள் தான் திருடி சென்றிருக்க வேண்டும் என்பதை கண்டுபிடித்தனர்.

அதன்பின் சந்தேகத்தின் பேரில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் அம்பிகா என்ற பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது போலீசார் கைரேகை எடுக்க வேண்டும் என அம்பிகாவிடம் கூறியதால் பயந்து போன அவர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடியதை தாமாகவே ஒத்துக்கொண்டார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, அந்த பீரோவின் சாவி தொலைந்து விட்டதால் மாற்று சாவி போட்டிருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்தி பீரோவில் அதிக நகைகள் இருக்கும் போது குறைந்த அளவு நகைகளை எடுத்தால் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்து அதனை திருடியதாகவும், அங்கிருந்த வைர கம்மலை திருடியதால் தான் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் வைர கம்மலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |