Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக பண பரிமாற்றம்… பிடிபட்ட புரோக்கர்கள்… திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!!

சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட 4 புரோக்கர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் செலவுகளுக்காக கொண்டு வரும் வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றிக் கொள்வதற்கு பண பரிமாற்ற மையமானது இயங்கி வருகின்றது. இவ்வாறாக பணத்தை மாற்றினால் அதற்கான வரியை பயணிகள் செலுத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக சட்டவிரோதமாக விமான நிலைய வளாகத்தில் வைத்து புரோக்கர்கள் மூலம் பண பரிமாற்றம் நடைபெறுவதாக புகார் வந்துள்ளது.

இது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் திருச்சி விமான நிலைய வளாகத்தில் சிறப்பு காவல் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு கும்பல் சட்டவிரோதமாக சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் வெளிநாட்டு பணத்தை பெற்றுக்கொண்டு இந்திய ரூபாய் நோட்டுகளாக அதனை மாற்றிக் கொடுத்தது தெரியவந்துள்ளது. இந்த பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட நான்கு புரோக்கர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |