இன்றைய காலகட்டத்தில் காதலிக்காதவர்களை தேடி தான் பார்க்க வேண்டும். நூற்றில் ஒரு பங்கு தான் காதலிகாதவர்கள் இருப்பார்கள். மற்ற அனைவருமே காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலை நாடுகளில் இருப்பது போலவே நம் நாடுகளிலும் காதல் திருமணம் என்பது தற்போது சகஜமாகிவிட்டது. ஒரு சில காதலர்கள் பெற்றோர்களுடைய எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து வருகின்றனர். இந்த காதலருக்கு ஒரு சிலர் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மேலூரை சேர்ந்தவர் மணி அமுதன். இவர் ஷாஜகான் படத்தில் வரும் விஜயை போல காதலர்களை சேர்த்து வைப்பதை வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ளார். சாதி மறுத்து காதல் செய்யும் பல ஜோடிகளை பெற்றோர் சேர்த்து வைப்பதில்லை. இதையடுத்து 50 ஜோடிகளுக்கு மணி அமுதன் திருமணம் செய்து வைத்துள்ளார். இவர் 2010 முதல் இதை சேவையாக செய்து வருகிறார்.