Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்கதேசத்தை பந்தாடிய வெஸ்ட்இண்டீஸ்…! 2-0கணக்கில் முன்னிலை பெற்று கலக்கல் …!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது  டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அணியை வீழ்த்தி வெஸ்ட்இண்டீஸ் அணி அசதியுள்ளது.

வங்காளதேசம் டாக்காவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் – வங்காள தேசம் அணியின் இரண்டாவது டெஸ்டில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. சில்வா 92 ரன்னிலும், போனர்  90 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர் 82 ரன்கள் எடுத்து 409 ரன்கள் மொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் குவித்துள்ளது. தைஜூல்  இஸ்லாம் , அபு ஜயத் வங்காளதேச அணி சார்பாக தலா  4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக வங்காளதேசம் முதல் இன்னிங்சை தொடங்கி 71 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. வங்காளதேசத்தின் விக்கெட் கீப்பர் லித்தன் தாஸ்  71 ரன்னும், ரஹீம் 54 ரன்னும், மெஹதி ஹசன் 57 ரன்னும் எடுக்க அந்த அணி 296 ரன்களில் ஆல் அவுட்டானது. கார்ன்வால் 5 விக்கெட்டும் ,கேப்ரியல் 3 விக்கெட்டும், ஜோசப் 2 விக்கெட்டும்  வெஸ்ட்இண்டீஸ் சார்பாக வீழ்த்தினர்.

இந்நிலையில் வெஸ்ட்இண்டீஸ் 113 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் எடுத்து இருந்த நிலையில் இன்று 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேச அணியின் பந்து வீச்சாளர்கள் வெஸ்ட்இண்டீஸ் அணியை 117ரன்களில் சுருட்டியது.

பின்னர் 231ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியினரின் வெற்றி கனவுக்கு வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணியினரின் சிறப்பான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாத வங்கதேச அணி 213ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 17ரன்னில் வெற்றி பெற்று கலக்கியது.

Categories

Tech |