Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதுவரை யாரும் பெற்றிராத சாதனை… டெஸ்ட் தொடரில் சதம் அடித்த… ரோஹித் சர்மா அசத்தல் …!!

ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் 7 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை  படைத்துள்ளார். 

சென்னையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து சுப்மன்கில், புஜாரா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து உடனடியாக ஆட்டமிழந்தனர். எனினும் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் ரோஹித் சர்மா ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சதம் அடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தற்போது நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் கிரிக்கெட்டின் மூன்று பார்மட்டிலும் நான்கு அணிகளுக்கு எதிராக சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

Categories

Tech |