நடிகர் தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கர்ணன் ‘. இந்தப் படத்தை பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார் . மேலும் லால் கௌரி ,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
#Karnan first look and “THEATRICAL RELEASE”date !! pic.twitter.com/N5gx88XgWr
— Dhanush (@dhanushkraja) February 14, 2021
இந்நிலையில் ‘கர்ணன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . அதில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும் கைவிலங்குடன் தலையில் ரத்தம் வழிய தனுஷ் நிற்கும் இந்த அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது .