உலக கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் விருது வழங்கிய போது கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல்ஹானி பெண் நடுவர்களுக்கு கைகுலுக்க மறுத்துள்ளார்.
உலககோப்பை கிளப் கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்குவதற்கான விழா நடைபெற்றுள்ளது. கத்தாரில் டைக்ரஸ் UANL மற்றும் பேயெர்ன் மூனிச் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றுள்ளது. அதன் பின்பு இந்த போட்டியில் சிறப்பாக பணியாற்றியுள்ள நடுவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது. கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல்ஹானி இதற்கான விருதை வழங்கியுள்ளார்.
அப்போது ஆண் நடுவர்களுக்கு கைகுலுக்கிய அவர் பெண் நடுவர்களுக்கு கைகுலுக்குவதற்கு மறுத்துள்ளார். அவர் எதற்காக இவ்வாறு செய்தார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இஸ்லாமிய சட்டத்தின்படி பிற பெண்களை தொடக் கூடாது எனவே அவர் அவ்வாறு நடந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.