11 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் 105 குழந்தைகளை பெற ஆசைப்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்தவர் கிறிஸ்டினா ஒஸ்ட்ருக் என்பவர். இவரது கோடிஸ்வர கணவரின் பெயர் கலிப். தற்போது இவர்களுக்கு 11 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஒரு குழந்தை மட்டுமே கிறிஸ்டினா இயற்கையாக பெற்றெடுத்துள்ளார்.மீதமுள்ள 10 குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் பெற்றெடுத்துள்ளார்.
அவர் 105 குழந்தைகளை பெற வேண்டும் என்று விரும்புகிறார். இதுகுறித்து கிறிஸ்டினா கூறியதாவது, என்னிடம் தற்போது 11 குழந்தைகள் உள்ளது. அவற்றில் ஒன்றை மட்டுமே நான் இயற்கையாக பெற்றெடுத்துள்ளேன். என் கணவர் மற்றும் என்னிடம் இருக்கும் மரபணு மூலம் வாடகைத்தாய் வழியாக நான் மீதம் இருக்கும் பத்து குழந்தைகளை பெற்றெடுத்தேன்.
எனக்கு 105 குழந்தைகளை பெற்றெடுக்க ஆசை. ஆகையால் என்னுடைய இந்த முடிவை நிறுத்துவதற்கான திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார். வாடகைத் தாய் மூலம் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் 8000 யூரோக்கள் செலவழித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.