நிர்வாகிகளை வைத்து தான் கட்சி இருக்கின்றதா என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.குறிப்பாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகியாக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்தார். அவரை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த TTV தினகரன் கூறுகையில், 2 மாதத்துக்கு முன்பு தேர்தல் நேரத்தில் அவர்கள் யாருக்காக பணியாற்றினார்கள் என்று தெரியும். நிர்வாகிகள் செல்வதால் அமமுக பாதிப்பு கிடையாது. பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக செல்கிறார்கள். தேர்தல் தோல்விக்கு பின் சில நிர்வாகிகள் வேறு கட்சிகளில் சேர்ந்து இருக்கிறார்கள் அவர்கள் செல்வதால் அமமுக வீழ்ச்சி அடையாது. நிர்வாகிகளை வைத்துதான் கட்சி இருக்கிறதா என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.